முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய முறையற்ற இடமாற்றத்தினை கண்டித்தும் முல்லைதீவு மாவட்டத்தில் மீனவ மக்களுக்கு எதிராக வன்மமான கருத்துக்களை தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலே இருக்கின்ற மீனவர் அமைப்புக்கள், மீனவ மக்கள் மற்றும் பிரதேச நலனை விரும்புகின்ற தனியார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (19.18.2025) மேற்கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை கரையான் என்றும் முழு மீனை தின்றுவிட்டு கரையார் குணத்தை காட்டுகின்றான் என்றும் அவனை முதலில் சுட்டிருக்க வேண்டும் என்றும் கூறிய கரைதுறைப்பற்று தவிசாளரின் தொலைபேசி உரையாடலில் ஆத்திரம் அடைந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்
போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த மக்கள் தவிசாளர் சுமந்திரனின் அடாவடிகள் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் என்றும் முல்லைத்தீவு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடைய நெருங்கிய சகா என்றும் தெரிவித்தனர். இவ்வாறான துரோகிகளை மண்ணை விட்டு துரத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
கருத்தை பதிவிட