ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை இன்னும் நிலையற்ற தன்மையிலேயே உள்ளது. பிட்காயின் விலை, அதன் சாதனை உச்சத்திலிருந்து கீழே சரிந்த பிறகும், இன்னும் சுமார் 115,000 அமெரிக்க டாலர் அளவில் நிலைத்திருந்தது. எனினும் இன்று 20-08-2025 113,800 அமெரிக்க டாலர்களை அடைந்துள்ளது. இதர முக்கிய நாணயங்களான எத்தீரியம் (ETH), ரிப்பிள், டோஜ்காயின் (DOGE), மற்றும் சோலானா (SOL) ஆகியவை இன்று கலவையான உயர்வு மற்றும் சரிவுகளுடன் வர்த்தகமாகின்றன.
பைனான்ஸ் நாணயம் (BNB) தற்போது வலுவான செயல்திறனைக் காட்டும் நாணயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது $851.87 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுவதோடு, அதன் சந்தை மதிப்பு $118.47 பில்லியன் ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் BNB விலை 1.86% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இது 2.36% அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் 12.51% வரை உயர்வு கண்டுள்ளது.
பிட்காயினுடன் சேர்ந்து இயங்கும் மேலும் பல நூறு கொயின்கள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது அதனால் புதிதாக கிரிப்டோ வர்த்தகம் வந்தவர்கள் வீழ்ச்சிநிலையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.
கருத்தை பதிவிட