வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் விசேட விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் இணைந்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடுமுறை கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் உடனடியாக அமைச்சின் செயலாளருக்கு விடுமுறை அறிவிக்க பணித்துள்ளார்.
ஆனால், தற்போது வடக்கு கல்வித் திணைக்களங்கள் விடுமுறை கேட்டுக்கொண்ட பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி விடுமுறை அறிவிக்க வலியுறுத்துவதாக எம்.பி. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட