இலங்கை மின்சார சபை (CEB) வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் (அக்டோபர் – டிசம்பர்) மின் கட்டணத்தை 6.8% உயர்த்தும் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இதற்கமைய, நாடளாவிய அளவில் 7.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதனால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த முன்மொழிவை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எழுத்து வடிவிலும் வாய்மொழி வடிவிலும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதுடன், அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம், மின் கட்டண உயர்வின் பாதிப்பு குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஜூன் மாதத்தில் 15% வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட