முகப்பு இலங்கை மூன்று லோரிகளில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மூன்று லோரிகளில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள்!

பகிரவும்
பகிரவும்

தங்காலைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட இரு தனிப்பட்ட சிறப்பு சோதனைச் செயல்பாடுகளில், மூன்று லோரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபாய் 200 கோடி பெறுமதியான போதைப்பொருள்களும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஹெரோயின் 200 கிலோகிராம், ஐஸ் போதைப்பொருள் 210 கிலோகிராம், மேலும் ஆறு துப்பாக்கிகள் அடங்குகின்றன.

இவற்றில் “டிமோ பட்டு லோரி” ஒன்றும், மற்றொரு லோரியும் தங்கல்லை சினிமோதர பகுதியில், மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் வீட்டுத் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த “டிமோ பட்டு லோரியில்” மட்டும் 10 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றொரு லோரியிலும் ஐஸ் பாக்கெட்டுகள் பல இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், 200 கிலோ ஹெரோயினும், பெருமளவு ஐஸ் போதைப்பொருளும், ஆறு துப்பாக்கிகளும் தங்கல்லை–கதிர்காமம் சாலை கொடெல்லவத்த பகுதியில் உள்ள வீட்டொன்றின் கூடைமாடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லோரியின் இரகசிய அறையிலிருந்து மீட்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளில் T-56 துப்பாக்கி ஒன்று மற்றும் ரிவால்வர் வகை துப்பாக்கிகள் ஐந்து அடங்குகின்றன.

இந்த சோதனைச் செயற்பாடுகள் தென் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்த்சிறி ஜயலத் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சாமிக்க பிரேமசிறி ஆகியோரின் மேற்பார்வையில் தங்கல்லைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...