ஹாங்காங்க்: புயல் “ராகசா” எச்சரிக்கைச் விடுக்கப்பட்ட வேளையில், கடற்கரையில் “அலைபார்த்தல்” (Wave-chasing) நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தென்னாசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் ஹாங்காங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் வெளியாகிய தகவலின்படி, அப்பே லெய் சோ (Ap Lei Chau) கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் இலங்கை மற்றும் இந்திய நாட்டுப் பெண்கள் இருவர் தங்களது நண்பர் சிறுவனுடன் கடலோரத்துக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டுக் கொண்டிருக்கையில் திடீரென ஏற்பட்ட பெரு அலை மூவரையும் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சாய் வானில் ஒரு குடும்பம் மூவரும் பெரு அலைகளில் சிக்கிய சம்பவத்துக்கு பிந்தையதாகும். அப்போது, தாயும் 5 வயது மகனும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை அவர்களை மீட்கக் குதித்தார். தற்போது மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புயல் காலங்களில் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் இருக்குமாறு அதிகாரிகள் பலமுறை எச்சரித்திருந்தும், இவ்வாறான “அலைபார்த்தல்” நடவடிக்கைகள் தனிநபர்களின் உயிரையே ஆபத்துக்குள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல் மீட்புப் பணியில் ஈடுபடும் அவசர சேவை அதிகாரிகளுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தற்போதைய புயல் நிலைமையில் “அலைபார்த்தல்” தொடர்பாக முதல் தடவையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source:-The Standard
கருத்தை பதிவிட