மன்னார் பகுதியில் இன்று (27) சற்று முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் கலகம் அடக்கும் படையினரின் பாதுகாப்புடன், காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மன்னார் நகரை நோக்கி பாரிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் ஒன்று கூடி, மன்னார் நுழைவு பகுதியில் உற்சாகமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
மக்களின் விருப்பம், எதிர்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை புறக்கணிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் காற்றாலை கோபுர பொருட்கள் கொண்டு செல்லப்படுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான செயல்.
மின்சார உற்பத்தி தேவையெனில் அது மக்கள் பங்கேற்புடன், உரையாடல் மூலம், சமரச மனப்பாங்குடன் நடைபெற வேண்டும். ஆனால், காவல் துறையினரின் சக்தியை பயன்படுத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மக்களிடையே அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையை உருவாக்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்கள் எழுப்பும் குரல் அடக்கப்படாமல், கேட்டறியப்பட வேண்டியது தான் நல்லாட்சி.
கருத்தை பதிவிட