இரவு 12 மணி (நள்ளிரவு) முதல் புதிய விலை அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ. 277 (ரூ. 6 குறைவு)
பெட்ரோல் 95 ஆக்டேன் – லிட்டருக்கு ரூ. 335 (ரூ. 6 குறைவு)
கெரோசீன் – லிட்டருக்கு ரூ. 180 (ரூ. 5 குறைவு)
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 299 (மாற்றம் இல்லை)
சூப்பர் டீசல் – ரூ. 313 (மாற்றம் இல்லை)
இந்த விலை குறைப்பினால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிலும், குறிப்பாக போக்குவரத்து செலவிலும் தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, பெட்ரோல் 92 ஆக்டேன் மற்றும் சூப்பர் டீசலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.
கருத்தை பதிவிட