ஒரு தலைவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி மக்களுடன் செலவிடும் தருணங்களில்தான் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், தலைவருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு அரசியலால் மட்டுப்பட்டது அல்ல, மாறாக அது நம்பிக்கையும் பரஸ்பர மதிப்பும் கொண்ட உறுதிப்பிணைப்பாகும் என கூறியுள்ளார்.
“என் வாழ்நாள் முழுவதும் மக்களுடனே கலந்து வாழ்ந்ததால், அவர்களின் அன்பை நான் நன்கு உணர்ந்துள்ளேன். எந்தவித சுயநல நோக்கமும் இன்றி வெளிப்படும் இவ்வன்பு அளவிட முடியாத ஒன்று. இது வெறும் அரசியல் உறவல்ல, இதய பந்தம். இதனை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது மேலும் வலுவடையும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், மக்களுடன் வாழ்ந்த அனுபவங்களே “ஒரு தலைவருக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி” என்பதை உணர்த்தியதாகவும், தன்னோடு இருந்த அனைவருக்கும் மரியாதையுடன் நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கருத்தை பதிவிட