முகப்பு இலங்கை மட்டக்களப்பு வவுணதீவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

பகிரவும்
பகிரவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று அதிகாலை (20) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது தகர வீடில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை ஒன்று நுழைந்ததாக கூறப்படுகிறது. யானையை கண்டு பயந்த பெண் வீட்டை விட்டு வெளியே ஓடியபோது, அந்த யானை தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலீஸ் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய வைரமுத்து மலர் என்பவர் ஆவார். அவர் நான்கு பிள்ளைகளின் தாயாகும்.

சம்பவம் குறித்து வவுணதீவு பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுணதீவு பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என். சத்தியானந்தயின் அனுமதிக்கமைய, காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் என பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இதன் ஆரம்பப் பணமாக, மரணமடைந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையினை கிராம உத்தியோகத்தரும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழங்கியுள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் தீபாவளி தினத்தில் வீதி விபத்து – இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தின்சித்தங்கேணி பகுதியில் இன்று மாலை (20) தீபாவளி தினத்தில் கடுமையான வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....

சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான கதை!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் “டோரென்சா” (Torenza) என்ற பெயரில் ஒரு நாட்டைச் சேர்ந்த பெண் அமெரிக்காவின்...

அக்கராயன் பகுதியில் கசிப்பு வியாபாரம் மோதல் – கஜன் எனும் நபர் கொலை!

அக்கராயன் பொலீஸ் பிரிவிற்குள் இடம்பெற்ற கசிப்பு வியாபாரம் சார்ந்த மோதல் உயிரிழப்புடன் முடிந்துள்ளது. சம்பவத்தில் “கஜன்”...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கே அவர்களின் 2025 தீபாவளி வாழ்த்து!

2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்து அறிவிப்பில், ஜனாதிபதி அனுர...