சமீபத்தில் சமூக வலைதளங்களில் “டோரென்சா” (Torenza) என்ற பெயரில் ஒரு நாட்டைச் சேர்ந்த பெண் அமெரிக்காவின் ஜான் எப். கேனெடி (JFK) சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டுடன் தோன்றியதாகக் கூறும் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் “டோரென்சா” என குறிப்பிடப்பட்ட பாஸ்போர்ட்டை காட்டி, அந்த நாடு உலக வரைபடத்தில் இல்லை என அதிகாரிகளிடம் கூறுவதாகக் காணப்பட்டது. “இது என் உலகமில்லை” என அந்தப் பெண் பதிலளித்ததாகவும் பல பதிவுகள் கூறின.
ஆனால், உண்மையில் இது முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கப்பட்ட, AI தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ என புலனாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கருத்தை பதிவிட