யாழ்ப்பாணத்தின்சித்தங்கேணி பகுதியில் இன்று மாலை (20) தீபாவளி தினத்தில் கடுமையான வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி காலை முதலே அந்தப் பகுதி வீதிகள் மக்கள் நெரிசலால் காணப்பட்டியிருந்த நிலையில், மாலை நேரத்தில் போக்குவரத்து ஓரளவு சீரானதாக இருந்தது. எனினும், பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகச் செல்லும் காட்சிகள் இடையிடையே பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், கரை நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தை பகுதியிலே நேருக்கு நேர் மோதி உள்ளது.
மோதலின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி நிதானத்தை இழந்து அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியது.
இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்த மற்ற இரு இளைஞர்கள் விபத்திற்குப் பிறகு தப்பிச் சென்றதாக கண்ணால் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்தை பதிவிட