புதிய கல்வி சீர்திருத்தங்களை முன்னிறுத்தி “புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை” என்ற பெயரில் இயங்கும் போலி வாட்ஸ்அப் குழுவொன்று தற்போது ஆசிரியர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சித்து வருவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்தக் குழு பல கல்வி வலயங்களில் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைக்க முயற்சிப்பதாக கூறினாலும், அது எந்தவிதத்திலும் அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற குழுவாக அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் குழுவின் வழியாக இடம்பெறும் தகவல் பரிமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு அமைச்சு எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, ஆசிரியர்களும் பொதுமக்களும் இத்தகைய போலி குழுக்களின் வலையில் சிக்காமல், விழிப்புடன் இருந்து அரசின் புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தை பாதிக்க முயலும் தவறான முயற்சிகளால் வழிதவறாமல் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
கருத்தை பதிவிட