பேஸ்புக் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தொன்றில் பங்கேற்றிருந்த 10 இளைஞர்கள், அதில் ஒருவரான பெண்ணும் சேர்ந்து, கொறக்கனை கல்கனுவா வீதியில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குள் உடையவர்கள் ஆகும். இவர்கள் ஹம்பாந்தோட்டை, தெஹிவளை, பொரளேஸ்கமுவ, காலி மற்றும் மவுண்ட் லவீனியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் (ICE) மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியும் அடங்குவர்.
இச் சம்பவம் தொடர்பாக கெசல்வெட்டை பொலிஸ் நிலையம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் பணதுற மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட