சித்தங்கேணி, யாழ்ப்பாணம்:
யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் அமைந்துள்ள சத்யசாய் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சத்யசாய் பாபா ஆலயம், யாழ்-காரைநகர் வீதியின் நான்காம் ஒழுங்கையில் அமைந்துள்ளது. இது 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். ஆலயம் இதுவரை சிறப்பாக இயங்கி வந்த போதிலும், அண்மைக்காலமாக ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் திரு. விக்னேஸ்வரன் என்பவரால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.
இன்று (05.11.2025) காலை 9.30 மணியளவில், ஆலயத்தின் ஒலிபெருக்கி மற்றும் பிற சாதனங்களைப் பராமரிப்பதற்காக சென்ற பக்தர்களை அவர் இடைமறித்து, கோயிலுக்குள் செல்ல விடாமல் அடாவடித்தனமாக நடந்து கொண்டார் என பக்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு நீதிமன்றம் குறித்த நபருக்கு எச்சரிக்கை வழங்கியிருந்தபோதிலும், அவர் அதனை மதிக்காமல் தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்தை பதிவிட