அரசாங்கத்தின் பொருளாதார திசை தெளிவற்றதாக இருப்பதாக சமகி ஜன பலவெகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2026 வரவுசெலவுதிட்ட உரையைக் குறித்துப் பேசுகையில், “அதிபர் தனது புதிய நியோ-லிபரல் சுதந்திர சந்தை கொள்கைக்கும், அவரது கட்சியின் பாதுகாப்பு அடிப்படையிலான தொழில்துறை உற்பத்தி பொருளாதாரக் கொள்கைக்கும் இடையில் குழப்பத்துடன் இருக்கிறார்,” எனக் குறிப்பிட்டார்.
“அதிபர் ஒரு பௌத்த ஆலயத்தில் பிக்குவாக , பங்குத்தந்தை போல இருந்தார். தன்னுடைய புதிய சுதந்திர சந்தை கொள்கையும், கட்சியின் பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையும் கலந்த குழப்பமான நிலைமையில் உள்ளார்,”
என்று ஹர்ஷ டி சில்வா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இப்படியான முரண்பாடான பொருளாதாரச் சிந்தனைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கின்றன. அரசு எந்த திசையில் நகர்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை,” என தெரிவித்தார்.
இந்தக் கருத்து, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் உரைக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சியின் விமர்சனமாகும். பொருளாதார நிபுணராக அறியப்படும் ஹர்ஷ டி சில்வா, நீண்ட காலமாக திறந்த வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நோக்கிய வளர்ச்சி கொள்கைக்கு ஆதரவளித்தவராக அறியப்படுகிறார்.
அரசாங்கம் தற்போது சுதந்திர சந்தை சீர்திருத்தங்களையும், அதே நேரத்தில் உள்நாட்டு தொழில் பாதுகாப்பையும் வலியுறுத்தும் முரண்பாடான பாதையை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
கருத்தை பதிவிட