கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
போர்ட் சிட்டி பகுதியில் இருந்த ஒரு படகின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களில் ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட இந்த இருவரும் மஹரகமாவில் பணியாற்றுவோர் என்பதும் தெரியவந்துள்ளது.
கருத்தை பதிவிட