திருக்கோவில் பகுதியில் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் அத்துமீறி நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் களுவாஞ்சிகுடியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய திருமணமான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி, அக்டோபர் 25ஆம் தேதி இலங்கையில் சுற்றுலா சென்றிருந்தபோது, ஒருவர் தகாத முறையில் அணுகியதாகக் குற்றம் சாட்டி இலங்கை சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். சம்பவத்துக்கான வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அது விரைவாக கவனம் பெற்றது.
சுற்றுலா பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் அன்று அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்கு பயணித்தபோது திருக்கோவில் பகுதியில் இந்த அத்துமீறல் நடந்தது என உறுதியாகியுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்தை பதிவிட