026 ஜனவரி மாதத்திற்காக லிட்ரோ (Litro) வீட்டு பயன்பாட்டு எல்.பி. எரிவாயு சிலிண்டர் நிரப்பு விலைகள் மாற்றமின்றி தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு காரணமாக எரிவாயு விலைகளை அதிகரிப்பது நியாயமானதாக இருந்தாலும், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு விலைகளை மாற்றமின்றி வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, லிட்ரோ வீட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:
-
12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,690
-
5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,482
-
2.3 கிலோ சிலிண்டர் – ரூ. 694
இதற்கிடையில், லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனம், நேற்று (ஜனவரி 01) முதல் வீட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகளின்படி,
12.5 கிலோ சிலிண்டர் ரூ.150 உயர்வுடன் ரூ.4,250 ஆகவும்,
5 கிலோ சிலிண்டர் ரூ.65 உயர்வுடன் ரூ.1,710 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாதாந்திர எரிபொருள் விலை திருத்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தை பதிவிட