தெஹிவளை மரைன் டிரைவில் அமைந்துள்ள கடற்கரை அருகிலான ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளின் படி, ஹோட்டலின் முன்பாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இரண்டு நபர்கள், திடீரென ஹோட்டல் உரிமையாளரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்தச் சூட்டில் அவரது தலைப்பகுதியில் குண்டு பாய்ந்ததால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் ஏற்பட்ட பகுதி தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கருத்தை பதிவிட