இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (2026.01.12) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலுக்கு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 வீடுகள் நிர்மாணிக்க ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய வீட்டுத்திட்ட பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், சமீபத்திய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரண கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத குடும்பங்கள் தொடர்பாகவும் அவர் விசாரித்ததுடன், அவ்வாறான பயனாளிகளின் எண்ணிக்கையை உடனடியாக தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
Source:-District Media unit news
பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் குடித்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்த...
மூலம்AdminJanuary 13, 2026கடுவெல–கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், நகர்ந்து கொண்டிருந்த பல வாகனங்களை ஒரு பொருளால் தாக்கும் மோட்டார் சைக்கிள்...
மூலம்AdminJanuary 13, 2026முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு...
மூலம்AdminJanuary 13, 2026பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28...
மூலம்AdminJanuary 12, 2026Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட