முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு முன்பாக நடத்திவந்த தொடர்ச்சியான ‘சத்தியாக்கிரக’ போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
ஆண்டு 6 கல்வி சீர்திருத்தத் திட்டம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என்று அரசு அறிவித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஊடகங்களிடம் பேசிய விமல் வீரவன்சா,
“சீர்திருத்தங்களை இடைநிறுத்தும் அரசின் தீர்மானம் இந்தப் போராட்டம் முன்வைத்த உடனடி கோரிக்கைகளுக்கு தற்காலிகத் தீர்வை வழங்கியுள்ளது. அதனால் இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.
இதேவேளை, மக்களின் கருத்துகளை புறக்கணித்து எதிர்காலத்தில் மீண்டும் இத்தகைய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கெதிராக போராட்டங்கள் மீண்டும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்தை பதிவிட